/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 4 சவரன் நகை திருட்டு
/
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 4 சவரன் நகை திருட்டு
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 4 சவரன் நகை திருட்டு
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 4 சவரன் நகை திருட்டு
ADDED : ஏப் 04, 2025 05:01 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து, 4 சவரன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் விபீஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 9ம் தேதி மயிலாடுதுறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த தமயந்தி உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 சவரன் தங்க நகையை மர்ம நபர் திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, மர்ம நபரை தேடி வருகின்றனர்.