/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
/
கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
கிராவல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
ADDED : ஆக 27, 2025 11:14 PM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு பகுதியில் அனுமதியில்லாமல் கிராவல் கடத்துவதாக ஆர்.டி.ஓ., அபிநயாவிற்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் விலங்கல்பட்டு காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த 4 டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.
ஆர்.டி.ஓ.,வை கண்டதும் இரண்டு லாரி டிரைவர்கள் லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடினர்.
ஆர்.டி.ஓ.,சோதனையில் டாரஸ் லாரியில் அனுமதியின்றி இரவு நேரத்தில் கிராவல் கடத்தி வந்தது தெரியவந்தது.
4 லாரிகளையும் ஆர்.டி.ஓ., பறிமுதல் செய்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தார்.
விலங்கல்பட்டு வி.ஏ.ஓ.,ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் கடலுார் அடுத்த சின்னபிள்ளையார்மேடு லாரி டிரைவர் தீனதயாளன்,27;கண்ணாரப்பேட்டை காத்தமுத்து,47;குவாரி உரிமையாளர் பரிசமங்களம் ராஜேந்திரன் மற்றும் தலைமறைவான இரண்டு டிரைவர் உள்ளிட்ட 5 பேர்மீது வழக்கு பதிந்து தீனதயாளன்,காத்தமுத்து ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

