/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை விருத்தாசலத்தில் துணிகரம்
/
விவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை விருத்தாசலத்தில் துணிகரம்
விவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை விருத்தாசலத்தில் துணிகரம்
விவசாயி வீட்டில் 40 சவரன் கொள்ளை விருத்தாசலத்தில் துணிகரம்
ADDED : ஜன 21, 2024 04:04 AM

விருத்தாசலம்: விருத்தாலத்தில் விவசாயி வீட்டில் 40 சவரன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன்,68; விவசாயி. இவர், கடந்த 16ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு மனைவி விசாலாட்சியுடன், சிதம்பரத்தில் உள்ள தனது இரண்டாவது மகள் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சுப்புராயன் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ.70 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., (பொறுப்பு) மோகன், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ஹூப்பரை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

