/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆன்லைனில் பர்மிட் மோசடி 5 பேர் கைது : இருவருக்கு வலை
/
ஆன்லைனில் பர்மிட் மோசடி 5 பேர் கைது : இருவருக்கு வலை
ஆன்லைனில் பர்மிட் மோசடி 5 பேர் கைது : இருவருக்கு வலை
ஆன்லைனில் பர்மிட் மோசடி 5 பேர் கைது : இருவருக்கு வலை
ADDED : செப் 18, 2025 03:10 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கிராவல் குவாரியில் ஆன்லைன் பர்மிட் மோசடியில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, ஐவரை கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தில் கடந்த ஒன்னரை மாதமாக அரசு அனுமதி பெற்று, கிராவல் குவாரி இயங்கி வருகிறது.
இதில், ஆன்லைன் பர்மின் போடுவதில் முறைகேடு நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. அதன்பேரில், விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த குவாரிக்கு சென்று, ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில், ஆன்லைன் பர்மிட் போடுவதில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, 3 டிப்பர் லாரி, 2 பொக்லைன் மற்றும் அங்கிருந்த போலி பர்மிட்டுகள், கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், ஆலடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்கு பதிந்து, பர்மிட் மோசடியில் ஈடுபட்ட, பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த உக்கிரவேல் மகன் ரமேஷ், 33; காடாம்புலியூர் அடுத்த காட்டாண்டிகுப்பத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் பிரவீன்குமார், 20; புதுப்பேட்டை, கிழக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தாமோதரன், 34; இருசாளக்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ரத்தினவேல், 19; பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தை சேர்ந்த குப்புசாமி மகன் பழனி, 57; பண்ருட்டி அடுத்த மாணிக்கம்பட்டு எழிலரசன், 44, மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து, ரமேஷ், பிரவீன்குமார், தாமோதரன், ரத்தினவேல், பழனி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.