வடலூரில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட 5 பேர் அதிரடி கைது
வடலூரில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட 5 பேர் அதிரடி கைது
ADDED : செப் 14, 2026 09:01 PM
14.9.26/கடலூர்/பத்ரிநாதன்/8838737295/1467/8:16
வடலூர், செப்.15-
வடலூரில் கொள்ளை அடிக்க திட்டமிட்டிருந்த, 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலுார் மாவட்டம், வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் குழுவினர் நேற்று மதியம் ஆபத்தாரணபுரம் ஆட்டு சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தைல மர தோப்பில் இருந்த சில நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், 5 பேர் கொண்ட அந்த கும்பல் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி விசாரணை நடத்தினர்.
இதில் திருவண்ணாமலையை சேர்ந்த ராஜசேகர் மகன் அருணகிரி, 26 ; திருவையாறு விஜய் நிர்மல் மகன் வசந்த ராஜன், 29 ; திண்டிவனம் குட்டக்கரை ராயப்பன் மகன் சஞ்சய், 21; கன்னியாகுமரி, ஆரல்வாய் மொழி செண்பகம் மகன் பார்த்திபன், 21; சென்னை, கன்னடபாளையம் சேகர் மகன் விஜய், 21, என தெரிய வந்தது.
இவர்கள், 5 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஒன்றாக சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டு, இதில் உள்ள விஜய் என்பவர் அனைவரையும் வடலூருக்கு அழைத்து வந்தது தெரிந்தது. இக்கும்பல் வடலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செ்ய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைதான பார்த்தீப,ன், அருணகிரி ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
