/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காப்பர் ஒயர் திருட்டு சிதம்பரத்தில் 5 பேர் கைது
/
காப்பர் ஒயர் திருட்டு சிதம்பரத்தில் 5 பேர் கைது
ADDED : மே 24, 2025 04:18 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தின் பல பகுதிகளில், டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், புவனகிரி, புதுச்சத்திரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதியில் டிரான்ஸ்பார்மரில் கடந்த ஒரு மாதத்தில் காப்பர் ஒயர்களை மர்ம கும்பல் திருடியது.
கும்பலை பிடிக்க சிதம்பரம் டி.எஸ்.பி.,லாமேக் மேற்பார்வையில் புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின், சிதம்பரம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையிலான போலீசார் நேற்று, புவனகிரி அடுத்த சுத்துக்குழி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த இருவரை நிறுத்தியதும், தப்பியோட முயன்றனர். போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில், சிதம்பரம் அடுத்த ஒட்டாங்குளம் கிராமம் மதுரை மகன் சக்திவேல்,21; சேகர் மகன் முருகேசன்,24, என்பதும், டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது.
இவர்கள் அளித்த தகவலின் பேரில், பஸ்சில் வந்த லால்புரம் ஜம்பு மகன் சந்துரு,22; சேகர் மகன் பிரகாஷ்,22; ராஜி மகன் பாண்டியன்,25; ஆகியோரையும் பிடித்தனர். பூதவராயன்பேட்டையில் டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருடி வந்தபோது போலீசில் சிக்கியதும் தெரிந்தது.
5 பேரும், புவனகிரி அடுத்த சித்தேரி, புதுச்சத்திரம் அடுத்த கருவேப்பம்பாடி, ராமநாதன்குப்பம், காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானம், குமராட்சி அடுத்த அத்திப்பட்டு, கீழக்கரை, ஆனைக்காரன்சத்திரம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் காப்பர் ஒயரை திருடியதை ஒப்புக் கொண்டனர்.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்து, 345 கிலோ காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.