/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொங்கல் நிகழ்ச்சியில் தகராறு தொழிலாளிக்கு கத்திக்குத்து பெண்ணாடத்தில் 5 பேர் கைது
/
பொங்கல் நிகழ்ச்சியில் தகராறு தொழிலாளிக்கு கத்திக்குத்து பெண்ணாடத்தில் 5 பேர் கைது
பொங்கல் நிகழ்ச்சியில் தகராறு தொழிலாளிக்கு கத்திக்குத்து பெண்ணாடத்தில் 5 பேர் கைது
பொங்கல் நிகழ்ச்சியில் தகராறு தொழிலாளிக்கு கத்திக்குத்து பெண்ணாடத்தில் 5 பேர் கைது
ADDED : ஜன 18, 2025 02:03 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் நள்ளிரவில் வீடுபுகுந்து கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கோவிலுார், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள்முருகன், 42. சென்னையில் கூலி வேலை பார்க்கிறார்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் விளையாட்டுப் போட்டி முடிந்து, இரவு கலை நிகழ்ச்சி நடந்தது.
நள்ளிரவு 12:00 மணியளவில் அருள்முருகன் டான்ஸ் ஆட மேடையில் ஏறினார்.
அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இவரது மகன் வீரச்செல்வன் மற்றும் உறவினர் ஏழுமலை உட்பட ஏழு பேர் முன்விரோதம் காரணமாக தடுத்து நிறுத்தி, அருள்முருகனை திட்டித் தாக்கினர். பின்னர் அருள்முருகன் வீட்டிற்கு சென்று விட்டார்.
நள்ளிரவு 12:30 மணியளவில் அருள்முருகன் வீட்டில் இருந்தபோது, அங்கு சென்ற பெரியசாமி, செல்வகுரு, வீரச்செல்வன், 36, பன்னீர்செல்வம், 27, தீபக், 24, மணிகண்டன் .27; ஏழுமலை, 24, ஆகியோர் அருள்முருகனை இடது தோள்பட்டை, முதுகு, இடது கை ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தினர்.
படுகாயமடைந்த அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அருள்முருகன் கொடுத்த புகாரின்பேரில், வீரச்செல்வன் உட்பட ஆறு பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பெரியசாமி,செல்வகுரு ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.