/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலை
/
ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலை
ADDED : டிச 23, 2024 04:28 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்துார் கிராமத்திற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்துார் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த 5 அடி நீளமுள்ள முதலை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஊராட்சி குப்பைத் தொட்டிக்குள் பதுங்கியது. இதனை பார்த்து அச்சமடைந்த கிராம மக்கள், சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
கடலுார் வனச்சரக மாவட்ட அதிகாரி குருசாமி உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரகர் வசந்தபாஸ்கர் தலைமையில் வனக்காப்பாளர்கள் ஞானசேகர், அன்புமணி ஆகியோர் சம்ப இடத்திற்கு சென்று குப்பைத்தொட்டியில் இருந்த முதலையை பிடித்தனர். பின், முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர்.

