/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓடும் பஸ்சில் கண்ணாடி உடைந்து 5 பேர் காயம்
/
ஓடும் பஸ்சில் கண்ணாடி உடைந்து 5 பேர் காயம்
ADDED : நவ 15, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே ஓடும் அரசு பஸ்சில் திடீரென கண்ணாடி உடைந்து சிதறியதில், டிரைவர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
விருத்தாசலத்தில் இருந்து அரசு பஸ் நேற்று மாலை கடலுார் நோக்கி வந்தது. பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கடலுார் அருகே சேடப்பாளையம் அடுத்த அன்னவல்லி அருகில் வந்தபோது, பஸ்சின் முன்பக்க கண்ணாடி திடீரென உடைந்து சிதறியது.
அப்போது, கண்ணாடி துண்டுகள் பட்டதில் டிரைவர் உட்பட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடன், டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு, பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கடலுார், முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.