/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
5 கடைகளுக்கு அபராதம்: சுகாதாரத்துறை நடவடிக்கை
/
5 கடைகளுக்கு அபராதம்: சுகாதாரத்துறை நடவடிக்கை
ADDED : ஜன 02, 2024 05:55 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதிகளில் புகையிலை பொருட் கள் விற்பனை செய்த 5 கடை களுக்கு சுகாதாரத் துறையி னர் அபாராதம் விதித்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த மேட்டுக்குப்பம் ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை தடுப்புப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை கம்மாபுரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
புகைபிடித்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேட்டுக்குப்பம் ஆர்ச் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ. 200 வீதம் அபாராதம் விதிக்கப்பட்டது.
கம்மாபுரம் சிறப்பு காவல் படை ஆய்வாளர் பழனிவேல், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், கலியபெருமாள், கிரிநாத், அர்னால்டு ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.

