ADDED : மார் 29, 2026 05:10 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,வைச் சேர்ந்த, 5 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடியில் தி.மு.க., அமைச்சர் கணேசன், விருத்தாசலத்தில் காங்., ராதாகிருஷ்ணன், நெய்வேலியில் தி.மு.க., சபா ராஜேந்திரன், பண்ருட்டியில் த.வா.க., வேல்முருகன், கடலுாரில் தி.மு.க., அய்யப்பன், குறிஞ்சிப் பாடியில் தி.மு.க., அமைச்சர் பன்னீர்செல்வம், புவனகிரியில் அ.தி.மு.க., அருண்மொழிதேவன், சிதம்பரத்தில் அ.தி.மு.க., பாண்டியன், காட்டுமன்னார்கோயிலில் வி.சி.,சிந்தனைச்செல்வன் ஆகியோர் சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ளனர்.
அதில் தற்போது தி.மு.க., அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள வரை திட்டக்குடியில் கணேசன், நெய் வேலியில் சபா ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடியில் பன்னீர்செல்வம் தி.மு.க., சார்பிலும், புவனகிரியில் அருண்மொழி தேவன், சிதம்பரத்தில் பாண்டியன் அ.தி.மு.க., சார்பிலும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 5 சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் களம் காண்கின்றனர்.
