/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதிய உணவு சாப்பிட்ட 5 மாணவிகள் மயக்கம்
/
மதிய உணவு சாப்பிட்ட 5 மாணவிகள் மயக்கம்
ADDED : டிச 25, 2024 05:20 AM
கடலுார் : வடலுார் அடுத்த சேப்ளாநத்தம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவிகளுக்கு நேற்று மதிய உணவாக சாம்பார் சாதம், முட்டை வழங்கப்பட்டது.
உணவு சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவிகள் கனியா, செல்வநாயகி, நர்மதா, 7ம் வகுப்பு மாணவிகள் துளசி, அக் ஷயா ஆகியோருக்கு திடீரென அடுத்தடுத்து வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. உடன், அவர்களை ஆசிரியைகள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பள்ளியின் மதிய உணவை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
சிகிச்சை முடிந்து மாணவிகள் வீடு திரும்பினர். இச்சம்பவம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மந்தாரக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.