UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 09:46 PM

அ நிறம் | அளவு
கடலுார்: திருட்டு வழக்கில் 5 ஆண்டாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், பெரிய கங்கணாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தப்பன். கடந்த 2021ம் ஆண்டு இவரது வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பைக் திருடு போனது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்த, கடலுார் பச்சாங்குப்பத்தை சேர்ந்த லட்சுமணன், ஆலப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த கடலுார் மஞ்சக்குப்பம், காமராஜர் நகரை சேர்ந்த மனோகர் மகன் விக்னேஷ்,31; என்பவரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
