ADDED : மார் 03, 2024 04:56 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார்-புதுச்சேரி ரயில் பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை உடன் துவங்க வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, கடலுார் மாநகர அனைத்துக் கட்சிகள், குடியிருப்போர் நலச்சங்கம், பொது நல அமைப்புகள் சார்பில் நேற்று திருப்பாதிரிப்புலியூரில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
ரயில்வே போலீசாரின் தடையை மீறி சோழன் விரைவு ரயிலை மறித்த தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, சலீம், துணை மேயர் தாமரைசெல்வன், மா.கம்யூ., மாதவன், சுப்புராயன், இந்திய.கம்யூ., குளோப், காங்., சந்திரசேகரன், திலகர் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
