/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு புகுந்து மயக்க மருந்து தெளித்து மூதாட்டியிடம் 50 சவரன் நகை கொள்ளை சேத்தியாத்தோப்பில் பட்டப்பகலில் துணிகரம்

ADDED : ஜன 30, 2024 06:35 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் வீடு புகுந்து, தனியாக இருந்த மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து, 50 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீத்தாராமன் மனைவி கமலாம்பாள்,70; இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கணவரை இழந்த கமலாம்பாள், தனியாக வசித்து வருகிறார்.
நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தனியாக இருந்த கமலாம்பாள் முகத்தில் மயக்க மருந்தை தெளித்ததும் அவர் மயங்கி விழுந்தார்.
மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 45 சவரன் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
கமலாம்பாள் வீட்டிலிருந்து மர்ம நபர்கள் ஓடுவதைக் கண்டு திடுக்கிட்ட அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். கமலாம்பாள் மயங்கி கிடந்ததை கண்டு, சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
கடலுாரிலிருந்து மோப்ப நாய் கூப்பர் மற்றும் விரல் ரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.