பள்ளியில் தேனீக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு
பள்ளியில் தேனீக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 15, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
சிறுபாக்கம்: கடலுார் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள வேப்ப மரத்தில், தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.
நேற்று காலை, 9:00 மணியளவில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த போது, மாணவர்கள் சிலர் தேன் கூட்டின் மீது கல் வீசியதில், கூட்டில் இருந்த தேனீக்கள், பள்ளி வளாகத்தில் இருந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை கடித்தன.
அனைவரும் மங்களூர் வட்டார அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
