தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 50 சப் இன்ஸ்பெக்டர்கள் கடலுார் மாவட்டத்தில் மாற்றம்

 50 சப் இன்ஸ்பெக்டர்கள் கடலுார் மாவட்டத்தில் மாற்றம்

 50 சப் இன்ஸ்பெக்டர்கள் கடலுார் மாவட்டத்தில் மாற்றம்


ADDED : ஜன 22, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடலுார் மாவட்டத்தில், 50 சப் இன்ஸ்பெக்டர்களை நேற்று எஸ்.பி., ஜெயக்குமார் இடமாற்றம் செய்துள்ளார்.

தமிழகத்தில், சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் நேற்று 50 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

கடலுார் என்.டி., சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி, கடலுார் துறைமுகத்திற்கும், கடலுார் ஓ.டி., முகில் அரசு, வடலுாருக்கும், ரெட்டிச்சாவடி சுகன்யா, பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், இடமாற் றம் செய்யப் பட்டுள்ளனர்.

துாக்கணாம்பாக்கம் உத்தரம்மாள், காடம்புலியூருக்கும், பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், கடலுார் ஓ.டி.,க்கும், முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல், கருவேப்பலங்குறிச்சிக்கும், நெல்லிக்குப்பம் உலகநாதன் கடலுார் என்.டி.,க்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் ஜெரினா, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் என மாவட்டம் முழுவதும் உள்ள 50 சப் இன்ஸ்பெக்டர்களை, எஸ்.பி., ஜெயக்குமார் இடமாற்றம் செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us