ADDED : மே 21, 2026 08:26 AM
அ நிறம் | அளவு
கடலுார்: மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கவுன்சிலிங் முறையில் மாற்றம் செய்து எஸ்.பி., ஜெயக் குமார் உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில், பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் சம்மந்தமாக விருப்ப மனுக்களை பெற்றார். அவர்கள் நேற்று எஸ்.பி., அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் எஸ்.பி., ரகுபதி முன்னிலையில் பணியிட மாறுதல் கோருவதற்கான காரணங்களை கேட்டு கவுன்சிலிங் முறையில் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் 52 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் உத்தரவை பிறப்பித்தார்.
