/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகள் 100 சதவீதம்
/
விருதை கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகள் 100 சதவீதம்
ADDED : மே 17, 2025 12:35 AM
விருத்தாசலம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை, உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலன் உட்பட 204 பள்ளிகளில் தேர்வெழுதிய 13 ஆயிரத்து 913 மாணவர்களில் 7,442 மாணவர்கள், 6,471 மாணவிகள் உட்பட 13,329 பேர் தேர்ச்சி பெற்று, 95.80 சதவீத தேர்ச்சியை பதிவு செய்தனர். இதில், 54 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அதன்படி, விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 36 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை டி.இ.ஓ., துரைபாண்டியன், தலைமை ஆசிரியர் தெய்வமணி வாழ்த்தினர்.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 151 மாணவர்களில், 146 தேர்ச்சி பெற்று, 97 சதவீதம் பெற்றது. மாணவர் ராகவன் 455 மதிப்பெண் பெற்று முதலிடம், கிருபாகரன் 427 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், சக்திவேல் 425 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் வினோத்குமார் வாழ்த்தினார்.
மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 138 மாணவர்களில், 124 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். மாணவர் அப்துல் ஜப்பார் 472 மதிப்பெண் பெற்று முதலிடம், முகம்மது உமர் 460 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், பிரசன்னா 448 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். தலைமை ஆசிரியர் சசிரேகா உட்பட ஆசிரியர்கள் வாழ்த்தினர்.