ADDED : ஏப் 25, 2026 10:52 PM
விருத்தாசலம்: முன்விரோத தகராறில் இருதரப்பை சேர்ந்த, 6 பேரை கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர்கள் முருகேசன், வீரபாண்டியன். இரு தரப்புக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், கடந்த 23ம் தேதி சட்டசபை தேர்தலன்று, இருவரும் ஆதரவாளர்களுடன் மோதிக் கொண்டனர்.
மறுநாள் மாலை 4:30 மணியளவில் சமாதானம் பேசும்போதும் மோதல் நடந்தது. பின்னர், காயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோதும் மோதிக் கொண்டனர்.
இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த, 10 பேர் மீது விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, வெங்கடேசன் மகன்கள் முருகேசன், 33, அபிமன்யூ, 26, கீழப்பாலையூர் வீரமுத்து மகன் தீனதயாளன், 23, தர்மலிங்கம் மகன் பூவராகன், 26, தங்கராசு மகன் தமிழ்வாணன், 22, மற்றும் கொளஞ்சி மகன் வீரபாண்டியன், 40, ஆகியோரை கைது செய்தனர்.
