தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீட்டுக்கு தீ வைப்பு 6 பேர் மீது வழக்கு

வீட்டுக்கு தீ வைப்பு 6 பேர் மீது வழக்கு

வீட்டுக்கு தீ வைப்பு 6 பேர் மீது வழக்கு


UPDATED : அக் 22, 2026 08:41 PM

ADDED : அக் 22, 2026 08:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 08:41 PM ADDED : அக் 22, 2026 08:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: வீட்டிற்கு தீ வைத்தது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவி உள்ளிட்ட 6 பேருக்கும் முன் விரோதம் உள்ளது.

சில மாதங்களுக்கு முன் தன்னிடம் தகராறு செய்ததாக தமிழரசி கொடுத்த புகாரில் ரவி உட்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கு கடலுார் கோர்ட்டில் கடந்த 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணைக்காக தமிழரசி கோர்ட்டுக்கு சென்றிருந்த போது தமிழரசியின் வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் சேதமாயின.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ரவி உட்பட 6 பேர் தான் தனது வீட்டை தீவைத்து எரித்து இருப்பார்கள் என சந்தேகமாக உள்ளதாக தமிழரசி நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தாார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us