ADDED : செப் 01, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: நிலத்தகராறில் பெண்ணை திட்டி கொலைமிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி உஷா, 38. அதேபகுதியை சேர்ந்தவர் சுதா; உறவினர்கள்.
உஷா நேற்று தனக்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைத்துள்ளார். அப்போது, அந்த நிலத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளதாக கூறி, சுதா, ஆதரவாளர்கள் ஆறுமுகம், சின்னசாமி, சந்தியா, சக்திவேல், சண்முகம் ஆகியோர் உஷாவை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சுதா, ஆதரவாளர்கள் ஆறுமுகம் உள்ளிட்ட 6 பேரை தேடிவருகின்றனர்.
