/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி மாணவர் மீது சரமாரி தாக்கு; நெய்வேலியில் ரவுடி உட்பட 6 பேர் கைது

ADDED : நவ 04, 2024 07:04 AM
நெய்வேலி : கல்லுாரி மாணவரை சரமாரியாக தாக்கி நெய்வேலி ரவுடி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி அடுத்த கீழ் வடகுத்து பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விஜயகுமார்,21; கோயம்புத்துார் தனியார் கல்லுாரியில் பொறியியல் படித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த விஜயகுமார், வட்டம் 24, மத்திய பஸ் நிலையத்தில் நண்பர்களுடன் டீக்கடைக்கு சென்றார். பைக்கில் பெட்ரோல் இல்லாததால் விஜயக்குமார் பைக்கை தள்ளி சென்றார்.
அப்போது, அவரை வழிமறித்த செடுத்தான்குப்பத்தைச் சேர்ந்த முருகவேல் மகன் ரவடி ராக் (எ) ராஜ்குமார்,26; புலவன்குப்பம் பாக்கியராஜ் மகன் வேல்முருகன்,19; உட்பட 6 பேர், விஜயகுமாரை வழிமறித்து, சரமாரியாக தாக்கினர்.
புகாரின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமார், வேல்முருகன், பேர்பெரியான்குப்பம் கார்த்தி,32; வல்லம் முருகன் மகன் வெள்ளையன்,22; முத்தாண்டிக்குப்பம் முருகன் மகன் மதன்,19; மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்தனர்.