தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 660 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி என்.எல்.சி., புதிய சாதனை

 660 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி என்.எல்.சி., புதிய சாதனை

 660 மெகா வாட் கூடுதல் மின் உற்பத்தி என்.எல்.சி., புதிய சாதனை


ADDED : ஜூன் 15, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெய்வேலி: என்.எல்.சி.,யில் 660 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட என்.யு.பி.பி.எல்., ன் 3வது யூனிட் வெற்றிகரமாக துவங்கி புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மற்றும் உத்தரப்பிரதேச ராஜ்ய வித்யுத் உத்பாதன் நிகம் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான நெய்வேலி உத்தரப்பிரதேச பவர் லிமிடெட் அனல்மின் நிலையம், புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

உ.பி., மாநிலம், கதம்பூர் அனல் மின் திட்டத்தின் 3வது யூனிட் (660 மெகாவாட்), கடந்த 2026 ஜூன் 13ம் தேதி முதல் வணிக ரீதியான செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 1980 மெகாவாட், மொத்த மின் உற்பத்தித் திறன் கொண்ட கதம்பூர் அனல் மின் திட்டம் முழுமையாக வணிக ரீதியான செயல்பாட்டின் கீழ் வந்துள்ளது.

இது குறித்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி கூறியதாவது:

கதம்பூர் அனல் மின் திட்டத்தின் மூன்று யூனிட் வெற்றிகரமாக இயக்கப்பட்டிருப்பது ஒரு மிக முக்கிய மைல்கல் ஆகும். நம்பகமான மின் உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றகிறது என கூறினார்.

நிகழ்வின் போது, என்.எல்.சி.,மனிதவளத்துறை இயக்குநர் சமீர் சுவரூப், திட்டங்கள் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா, என்.யு.பி.பி.எல்., நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துரைக்குமார் உடனிருந்தனர்.

அந்த அனல்மின் நிலையத்தின் முதல் யூனிட்டை கடந்த 2025 ம் ஆண்டு மே 30 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். கடந்த மே 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இத்திட்டத்தின் 1 மற்றும் 2 வது யூனிட்டுகள் இணைந்து ஒட்டுமொத்தமாக 6,107 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளன.

இதன் மூலம் ரூ. 4,756 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று யூனிட்டுகளும் முழுமையாக இயக்கப்பட்டுள்ளதால், இந்த அனல் மின் நிலையம் ஆண்டுதோறும் 14,743 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவின் சராசரியான சுமார் 1.2 கோடி (12 மில்லியன்) வீடுகளின் வருடாந்திர மின் தேவையைப் பூர்த்தி செய்யும். இதன் விளைவாக, இத்திட்டத்தின் மூலம் ஈட்டப்படும் வருடாந்திர வருவாய் ஒரு ஆண்டில் ரூ.8,453 கோடியாக கணிசமாக உயரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us