ADDED : மார் 12, 2026 04:28 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம், நடராஜர் கார்டன் அருகில் உள்ள ஈத்கா மைதானம் பகுதியில், நேற்று நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தொடர்ந்து சிதம்பரம், கலைஞர் காலனியை சேர்ந்த செந்தில் வேலன் மகன் விஷ்வா, 27; சிதம்பரம் லேபர் குவாட்டர்ஸ் பகுதியை சேர்ந்த பாபு மகன் முரளிவிஜய், 30; சிதம்பரம் அடுத்துள்ள சித்தாலப்பாடியை சேர்ந்த மணிகண்டன் மகன் மாதேஷ், 24; கே. ஆடுர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செல்வம், 22; சிதம்பரம், அனந்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் தேவமூர்த்தி, 26; வீரசோழகன் பகுதியை சேர்ந்த ராஜா மகன் ரகு, 18; பழைய நல்லுார் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயசீலன்,21; ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 400 கிராம் கஞ்ச பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்
