/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆட்டோவில் கஞ்சா கடத்தல் 7 பேர் கைது: 80 கிலோ பறிமுதல்
/
ஆட்டோவில் கஞ்சா கடத்தல் 7 பேர் கைது: 80 கிலோ பறிமுதல்
ஆட்டோவில் கஞ்சா கடத்தல் 7 பேர் கைது: 80 கிலோ பறிமுதல்
ஆட்டோவில் கஞ்சா கடத்தல் 7 பேர் கைது: 80 கிலோ பறிமுதல்
ADDED : மே 20, 2025 01:01 AM

திருவெண்ணெய்நல்லுார் : சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த தாய், மகன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, 4 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது.
ஆட்டோவில் இருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த மேல்கால்வாய் பகுதியை சேர்ந்த கணேசன்,40; அவரது தாய் தனம், 60; சென்னையில் இருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இருவரும் அளித்த தகவலின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் தெற்கு தெரு தசரதன் மகன் தமிழ், 21; அனந்தபுரம் முருகன் மகன் குணசேகரன்,21; ஒட்டம்பட்டு பகுதியைச் சேர்ந்த சர்க்கரை மகன் தினேஷ், 19; கஞ்சா சப்ளை செய்த கூடுவாஞ்சேரி மேல்கால்வாய் சேகர் மகன் கார்த்திக், 32; சென்னை, பெரும்பாக்கம் செல்வராஜ் மகன் சீனிவாசன், 30; ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.