ADDED : அக் 17, 2026 02:27 AM
அ நிறம் | அளவு
ராமநத்தம்: பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அரங்கூர் ஏரிக்கரையில், பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜிவ்காந்தி,48; சக்திவேல்,37; செம்மலை,40; ஜாகிர்,37; உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
