ADDED : ஜன 25, 2026 04:03 AM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பஸ் மரத்தில் மோதி, 7 பேர் காயமடைந்தனர்.
பண்ருட்டியில் இருந்து நேற்று மாலை தனியார் பஸ் கடலுார் நோக்கி சென்றது. நெல்லிக்குப்பம் அடுத்த முத்து நாராயணபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டருக்கு பஸ் டிரைவர் வழிவிட முயன்றார்.
அப்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த பழமையான புங்கை மரத்தில் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த பண்ருட்டியை சேர்ந்த துரை,52; அகரம் எழுமேடு மங்கவரத்தம்மாள்,55; திருவெண்ணைநல்லுார் கலைச்செல்வன் ஆகியோர் படுகாயமடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மற்ற 4 பேருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
