/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் விபத்தில் சிக்கி 7 பேர் காயம்
/
கார் விபத்தில் சிக்கி 7 பேர் காயம்
ADDED : ஜூலை 19, 2025 03:04 AM
மந்தாரக்குப்பம் : நெய்வேலி அருகே கார் விபத்துக்குள்ளானதில், 7 பேர் காயமடைந்தனர்.
கடலுார், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தகுமாா், 44; இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு காரில் கடலுார் திரும்பிக் கொண்டிருந்தார். காரை கடலுார், சாலைக்கரையைச் சேர்ந்த செல்வகணபதி ஓட்டினார்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி அடுத்த அரசக்குழி அருகில் நேற்று அதிகாலை 4:45 மணிக்கு கார் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சாந்தகுமார், மனைவி விக்னேஸ்வரி,34; மகன் அகரன், 6; மகள் ஹிரன்மை,8; சகோதரி சரஸ்வதி,48; உறவினர் அம்பிகா 46; டிரைவர் செல்வகணபதி ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த ஊமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.