/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
/
7 கிலோ குட்கா பறிமுதல் கடை உரிமையாளர் கைது
ADDED : டிச 29, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து, 7 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 11:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, விருத்தாசலம் - திட்டக்குடி மெயின்ரோடு, இறையூர் கூட்டுறவு வங்கி அருகே உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனர்.
அப்போது அனுமதியின்றி விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட 2,280 பாக்கெட்டுகள் அடங்கிய 7 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பெட்டிக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன், 65, என்பவரை போலீசார் கைது செய்தனர்.