/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காரில் ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்
/
காரில் ரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்
ADDED : பிப் 20, 2025 06:38 AM

கடலுார்; காட்டுமன்னார்கோவில் அருகே ஏழு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்திச்சென்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வம், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று காட்டுமன்னார்கோவில் வடவாறு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த கருப்பு நிற மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தன.
காரிலிருந்த 320 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், காரிலிருந்த நான்கு பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள், அரியலுார் மாவட்டம், தேளூர் அசோக்குமார்,41, ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தை சேர்ந்த லக்காராம் மகன் தாலாராம்,28, அஜய்ராம் மகன் கோரக்கா ராம்,25, சூரத் மாவட்டத்தை சேர்ந்த வாலாபாய் புரோகித் மகன் ஜேயேஷ்,22, என்பதும், பெங்களூரில் இருந்து அரியலுாருக்கு போதை பொருட்களை கடத்திச்சென்றதும் தெரிந்தது.