ADDED : ஏப் 27, 2025 07:17 AM

விருத்தாசலம் :  விருத்தாசலம் அருகே கதண்டுகள் கொட்டியதில் மூதாட்டி உட்பட 7 பேர்  காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கவனை கிராமத்தில் நேற்று பகல் 11:00 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, அங்குள்ள புளியமரத்தில் இருந்த கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் கூட்டின் மீது பந்து விழுந்தது.
இதனால், கூட்டில் இருந்து கதண்டுகள் பறந்ததால் அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடியனர்.
கதண்டு கொட்டியதில் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மனைவி விசாலாட்சி, 80; முருகானந்தம் மனைவி யமுனா, 44, உட்பட 7 பேர் காயமடைந்தனர். இவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தீவிர சிகிச்சை அளித்தனர்.
புளியமரத்தில் அதிகளவு கூடு கட்டியுள்ள கதண்டுகளை அழிக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

