/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகைகள் திருட்டு
ADDED : செப் 27, 2025 02:39 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 7 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்,50; இவர் கடலுார் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக். இவரது மனைவி மஞ்சுளா வெளியூர் சென்றார். மணிகண்டன் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.
இரவு 8:00 மணிக்கு அவர் வீடு திரும்பிய போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.