ADDED : ஜூன் 10, 2026 04:15 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உத்தர விட்டுள்ளார்.
கடலுார் கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) செம்மனசெல்வி, ஸ்ரீமுஷ்ணம் தாசில்தாராகவும், அங்கிருந்த இளஞ்சூரியன் புவனகிரி சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், பண்ருட்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அமர்நாத் வேப்பூர் தாசில்தாராகவும், அங்கிருந்த செந்தில்வேல் பண்ருட்டி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், நெய்வேலி நில எடுப்பு தனி தாசில்தார் கார்த்திகேயன் சிதம்பரம் சமூக பாதுாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், புவனகிரி தாசில்தார் தமிழ்ச்செல்வன், கடலுார் கலெக்டர் அலுவல மேலாளராகவும் (பொது), நெய்வேலி நில எடுப்பு தனி தாசில்தாராக இருந்த ஷானாஸ் புவனகிரி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
