/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமிக்கு தொல்லை காமுகனுக்கு 7 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு தொல்லை காமுகனுக்கு 7 ஆண்டு சிறை
ADDED : மே 24, 2025 04:16 AM

கடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பளித்தது.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தமன்,48, கொத்தனார். இவர்,கடந்த 2012ம் ஆண்டு, 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதைப் பார்த்த சிறுமியின் தாய், குறிஞ்சிப்பாடி போலீசில்புகார் அளித்தார்.அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து உத்தமனை கைது செய்தனர்.
வழக்கு விசாரணை கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார். இவ்வழக்கில் நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், உத்தமனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.