ADDED : பிப் 14, 2026 03:46 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், தேசிய ஊனமுற்றோர் உரிமைகளுக்கான மேடை ஆகியன சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று பகல் 11:30 மணியளவில், மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வன் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 35 பெண்கள் உட்பட 70 மாற்றுத்திறனாளிகளை இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
