/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறைகேட்பு நாள் கூட்டம் 720 மனுக்கள் குவிந்தன
/
குறைகேட்பு நாள் கூட்டம் 720 மனுக்கள் குவிந்தன
ADDED : ஜன 23, 2024 05:38 AM
கடலுார் :  கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த  வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் 720 மனுக்கள் குவிந்தன.
கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புநாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்கள், ஆக்கிரமிப்பு தொடர்பாக 105, முதியோர் உதவித்தொகை கேட்டு 36,  குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34, ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 60,  காவல்துறை தொடர்பாக 102 உட்பட மொத்தம் 720 மனுக்கள் பெறப்பட்டது.
மேலும், நேற்றைய குறைதீர்வு கூட்டத்தில்,  6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள்,  18 வயது நிறைவடைந்த மனவளர்ச்சி குன்றிய 7 மாற்றுத்திறனாளிகளின் உறவினர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ், வருவாய்த்துறை சார்பில் 1 பயனாளிக்கு இலவச மனை பட்டாவிற்கான ஆணை வழங்கப்பட்டது.

