தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 74 கிலோ பிரமாண்ட லட்டு  விநாயகருக்கு படையல் 

74 கிலோ பிரமாண்ட லட்டு  விநாயகருக்கு படையல் 

74 கிலோ பிரமாண்ட லட்டு  விநாயகருக்கு படையல் 


ADDED : செப் 14, 2026 05:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 05:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் உள்ள சுவீட்ஸ் கடையில் 74 கிலோ எடை கொண்ட லட்டு, விநாயகருக்கு படையல் வைக்கப்பட்டது. 

கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் ஸ்ரீராம் சுவீட்ஸ் கடை உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி  பிரமாண்டமான லட்டு தயாரித்து, விநாயகருக்கு படையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி 74 கிலோ எடை கொண்ட லட்டு, விநாயகருக்கு படையல் வைக்கப்பட்டது. 

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் விஜய், வினய் கூறுகையில், ‘மக்களின் வாழ்க்கை இனிமையாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரமாண்டமான லட்டு தயாரித்து பிள்ளையார் வழிபாட்டை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்தாண்டு 74 கிலோ எடையிலான லட்டு, 15 பேர் அடங்கிய குழுவினரால் 3 நாட்கள் தயார் செய்யப்பட்டது. 

33 கிலோ கடலை மாவு, 37 கிலோ சர்க்கரை, 35 கிலோ நெய், 3 கிலோ முந்திரி, 2 கிலோ திராட்சை, 250 கிராம் ஏலக்காய் ஆகிய பொருள்களை பயன்படுத்தி லட்டு தயாரிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பிறகு இந்த லட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்’ என்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us