/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 07, 2025 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மனைவி ரேவதி,34; கணவரை பிரிந்து சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். நேற்று மாலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. தன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ரேவதி,34; கொடுத்த புகாரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.