/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒரே இரவில் 8 கடைகளில் திருட்டு; கடலுார், நெல்லிக்குப்பத்தில் வியாபாரிகள் அச்சம்
/
ஒரே இரவில் 8 கடைகளில் திருட்டு; கடலுார், நெல்லிக்குப்பத்தில் வியாபாரிகள் அச்சம்
ஒரே இரவில் 8 கடைகளில் திருட்டு; கடலுார், நெல்லிக்குப்பத்தில் வியாபாரிகள் அச்சம்
ஒரே இரவில் 8 கடைகளில் திருட்டு; கடலுார், நெல்லிக்குப்பத்தில் வியாபாரிகள் அச்சம்
ADDED : ஏப் 14, 2025 06:40 AM

கடலுார் : கடலுார், நெல்லிக்குப்பத்தில் பகுதிகளில், ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம், வியாபாரிகளை அச்சமடைய செய்துள்ளது.
கடலுார் முதுநகரை சேர்ந்தவர் முகமது அயூப். கடலுார் புதுப்பாளையம் தரைகாத்தம்மன் கோவில் அருகே மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இந்த கடையின் பூட்டை உடைத்து, ஒரு மொபைல் போன் மற்றும் ரூ. 2000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கடலுார் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, கடலுார் செல்லங்குப்பம் இம்பீரியல் சாலையில், சோமசுந்தரம் என்பவரின் எலக்ட்ரிக் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 6000 பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் திருடிச்சென்றனர். அதே பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த 2 பைக்குகளை திருடி சென்றனர். கடலுார் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் என்பவரின், இனிப்பு கடை பூட்டை உடைத்து ரூ. 1000 பணம் மற்றும் 2 கிலோ இனிப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் மொபைல் போன் சர்வீஸ் கடையில் ரூ. 15,000 மற்றும் அங்கிருந்த பேக் கடையின் பூட்டை உடைத்து பேக்குகள் திருடப்பட்டது.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் தனியார் கல்லுாரி எதிரில், அதே பகுதியை சேர்ந்த சங்கர் டைலர் கடையும், சீனிவாசன் பங்க் கடையும், சிவஞானம் மருந்து கடையும் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து உள்ள இந்த மூன்று கடைகளின் பூட்டை உடைத்து, 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து கடையில் இருந்த ஹார்லிக்ஸ் போன்ற பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடலுார் மற்றும் நெல்லிக்குப்பத்தில் ஒரே இரவில் 8 கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

