/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 800 ரேஷன் கடைகள் மூடல்
/
மாவட்டத்தில் 800 ரேஷன் கடைகள் மூடல்
ADDED : பிப் 20, 2026 05:13 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
பொது வினியோக திட்டத்திற்கு என, தனித்துறையை உருவாக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் எடையாளரை நியமிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நேற்று பணிகளை புறக்கணித்து சென்னையில் நடந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.
கடலுார் மாவட்டத்தில் 1,460 ரேஷன் கடைகள் இயங்கி வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் 800க்கும் மேற்பட்டோர் சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

