/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து விதிமீறல் ஒரே நாளில் 814 வழக்கு
/
போக்குவரத்து விதிமீறல் ஒரே நாளில் 814 வழக்கு
ADDED : ஜன 20, 2025 05:02 AM
கடலுார், : மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக ஒரே நாளில் 814 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை மற்றும் ஆற்றுத்திருவிழா பாது காப்பு பணிகளில் 2000 போலீசார் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, ஆற்றுத் திருவிழாவான நேற்று முன்தினம், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு, எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட 7 சப் டிவிஷன்களிலும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இதில், மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 29, குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 7, ெஹல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 493, ஓவர் ஸ்பீடு 4, சீல்ட் பெல்ட் அணியாமல் சென்றதாக 23, போலி பதிவு எண் 16 என மொத்தம் 814 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.