/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
87 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு; ஓராண்டில் போலீஸ் நடவடிக்கை
/
87 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு; ஓராண்டில் போலீஸ் நடவடிக்கை
87 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு; ஓராண்டில் போலீஸ் நடவடிக்கை
87 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு; ஓராண்டில் போலீஸ் நடவடிக்கை
ADDED : ஜன 01, 2024 06:01 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில், 87 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி., ராஜாராம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:
கடலுார் மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் கொள்ளை, வழிபறி, திருட்டு ஆகிய 288 வழக்குகள் பதிந்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 9 கோடியே 52 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 46 கொலை வழக்குகளில் கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 கொலை வழக்குகளில் 14 குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர் மீது 7,625 வழக்குகள். மொபைல் பேசியப்படி வாகனம் ஓட்டிய 6,725 பேர், ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனங்கள் 604, என மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 454 வழக்குகள் பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது.
கொலை, கொள்ளை, சாராய கடத்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்டு வந்த 87 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 389 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து, 475 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றதாக, 1,064 பேர் கைது செய்யப்பட்டனர்.
விற்பனை செய்த 197 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு எஸ்.பி., தெரிவித்தார்.