ADDED : பிப் 11, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் சிதம்பரம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, பஜனை மடத்தெரு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக 9 பேரை பிடித்து சிதம்பரம் நகர போலீசில் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து, சபாநாயகர் தெரு வைப்புச்சாவடியை சேர்ந்த தில்லைக்கண்ணு மகன் சிவானந்தம், 27; முருகன், 53; சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு மணிவேல், 40; சாத்தான்குடி பாலமுருகன், 52; சிதம்பரம் முத்துமாணிக்கம் தெரு மாரியப்பன், 38; தொப்பையான் தெரு ராஜேஷ், 35; உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.