/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் மீது லாரி மோதி 9 பேர் படுகாயம்
/
பஸ் மீது லாரி மோதி 9 பேர் படுகாயம்
ADDED : மார் 20, 2024 05:19 AM
பண்ருட்டி, : பண்ருட்டி கெடிலம் பாலத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதியதில், பஸ் டிரைவர் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர்.
பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரை பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ் வந்தது. அப்போது எதிரில் சென்னை- நெய்வேலி நோக்கி சென்ற கண்ெடய்னர் லாரி, பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பதிவு நசுங்கி விபத்துக்குள்ளானது.
இதில், நன்னிலத்தை சேர்ந்த பஸ் டிரைவர் பாஸ்கர், 50;பயணிகளான சென்னையை சேர்ந்த ரேணுகா, 50; மயிலாடுதுறை குமார்,45; சிதம்பரம் சங்கர், 34; கண்டக்டர் சுரேஷ், 39; உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

