/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
93 காய்கறி கடைகள் தற்காலிகமாக மாற்றம்
/
93 காய்கறி கடைகள் தற்காலிகமாக மாற்றம்
ADDED : மார் 18, 2024 03:35 AM
விருத்தாசலம் :  விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் இருந்த 93 கடைகள், தற்காலிக ெஷட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
விருத்தாசலம் காட்டுக்கூடலுார் சாலையில் உள்ள நகராட்சி காய்கறி மார்க்கெட், 5 கோடி ரூபாயில் நவீன முறையில் புதிய கட்டடமாக மாற்றும் பணி நடக்கிறது. இதற்காக ஒரு பகுதியில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்தன. மற்றொரு பகுதியில் உள்ள கடைகளை காலி செய்து, கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன.
ஒட்டுமொத்தமாக கடைகளை அகற்றினால், வாழ்வாதாரம் பாதிக்கும் என, காய்கறி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, கட்டுமான பணிகள் முடிந்த பகுதியில் தற்காலிகமாக ெஷட் அமைத்து, கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.
அதன்படி, தரைக் கடைகள் 13, காய்கறி கடைகள் 80 உட்பட 93 கடைகள் மாற்றம் செய்யப்பட்டன.
சேர்மன் சங்கவி முருகதாஸ், கமிஷனர் ப்ரித்தி, மேலாளர் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் ஷகிலா பானு ஆகியோர் பார்வையிட்டு, வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

