/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நீட்' மாதிரி தேர்வு எழுதிய பெங்களூரு மாணவர்
/
'நீட்' மாதிரி தேர்வு எழுதிய பெங்களூரு மாணவர்
ADDED : ஏப் 28, 2025 06:56 AM

கடலுார்  கடலுாரில் தினமலர் நாளிதழ்  நடத்திய நீட் மாதிரி தேர்வில் பெங்களூரு மாணவர் பங்கேற்றார்.
கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனம் இணைந்து நீட் மாதிரி தேர்வை நடத்தியது. இதில், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர் தீபக், பெங்களூருவில் இருந்து தேர்வு எழுத வந்தார்.
மாணவர் தீபக் கூறுகையில், 'நான் பெங்களூருவில் உள்ள தனியார் சர்வதேச பள்ளியில் படிக்கிறேன். 'தினமலர்' நீட் மாதிரி தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால், பயிற்சி பெறுவதற்கு பெங்களூருவிலிருந்து நேற்று வந்தேன்.
தேர்வில் பங்கேற்று எழுதியது நல்ல பயிற்சியாக இருந்தது' என்றார்.

