/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைக்கிளில் சென்ற சிறுவன் கார் மோதி பரிதாப பலி
/
சைக்கிளில் சென்ற சிறுவன் கார் மோதி பரிதாப பலி
ADDED : செப் 15, 2025 02:21 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் சைக்கிளில் சென்ற சிறுவன், கார் மோதி இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியை சேர்ந்தவர்கள் வடிவேல் மகன் ஈஸ்வர்,14; செல்வம் மகன் மகேஷ்,12; அரசு உதவிப் பெறும் பள்ளியில் ஈஸ்வர் 9ம் வகுப்பு படிக்கிறார்.
அதே பள்ளியில் மகேஷ் 7ம் வகுப்பும் படித்தார்.
இருவரும் நேற்று பகல் 12:00 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு வி.கே.டி., சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
சைக்கிளை ஈஸ்வர் ஓட்டினார். வானமாதேவி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஸ்விப்ட் டிசையர் கார், சைக்கிளின் பின்னால் மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த மகேஷ், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த சோழதரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய ஈஸ்வரை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.