/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோர்ட் வாசலில் பழுதான நிழற்குடையால் ஆபத்து
/
கோர்ட் வாசலில் பழுதான நிழற்குடையால் ஆபத்து
ADDED : ஜூலை 10, 2025 11:26 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம்- வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், தனியார் பள்ளிகள், நகராட்சிப் பள்ளி, திருமண மண்டபங்கள் உள்ளதால் எந்நேரமும் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். மேலும் வழக்கு விசாரணைக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள பயணியர் நிழற்குடையில் மேற்கூரை, சுவர்களில் விரிசல் விழுந்து, காரைகள் பெயர்ந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இருப்பினும் வெயில், மழை காலங்களில் வேறு வழியின்றி பயணிகள் ஒதுங்கும் அவலம் உள்ளது. இதனால் பயணிகள், முதியோருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. எனவே, பழுதான நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.