/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை வசதிகள் இல்லாத பஸ்நிலையம்; திட்டமிடல் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு
/
அடிப்படை வசதிகள் இல்லாத பஸ்நிலையம்; திட்டமிடல் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாத பஸ்நிலையம்; திட்டமிடல் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாத பஸ்நிலையம்; திட்டமிடல் இல்லாததால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : பிப் 24, 2024 06:26 AM

திட்டக்குடி : கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சியில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பின் துவக்கப்பட்ட மின்மயானம், தெப்பக்குளம் சீரமைப்பு பணி, மழைநீர் வடிகால் கால்வாய் என பல்வேறு திட்டப்பணிகள் இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடக்கிறது.
இதில் திட்டக்குடி பஸ்நிலைய சீரமைப்பு பணி துவக்கப்பட்டு ஒருவருடத்திற்குப்பின் கடந்த பிப்.16ம் தேதி திறக்கப்பட்டது.
அவசர கோலத்தில் திறக்கப்பட்ட இந்த பஸ்நிலையத்தில் அடிப்படைத்தேவைகளான குடிநீர், வடிகால் வசதி, கழிவறை என எதுவுமே இல்லை.
இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கழிவுநீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கும் அவலநிலை காணப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ., திட்டக்குடி நகர தலைவர் பூமிநாதன் கூறுகையில், திட்டக்குடி பஸ்நிலைய பராமரிப்பு பணிகள் ஒருவருடத்திற்கு முன் சுமார் ஒருகோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டது. தற்போது அதற்கும் மேலாக 40லட்ச வரை செலவானதாக கூறுகிறார்கள்.
ஆனால், பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர், கழிவறை, மின்விசிறி வசதி இல்லை. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
பஸ்கள் நின்று செல்ல வேண்டிய இடத்தில் காய்கறி கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், பஸ்கள் பஸ்நிலையத்திற்குள்ளேயே வருவதில்லை.
போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், காய்கறி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். திட்டக்குடி நகராட்சியில் நடைபெறும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்றார்.